அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கொல்லாபுரி அம்மன் கோவிலில் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழா கொண்டாட்டப்பட்டது.

Update: 2022-10-09 18:45 GMT

மொரப்பூர்:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழா கம்பைநல்லூர் அருகே உள்ள கொல்லாபுரியம்மன் கோவிலில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தர்மபுரி கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் கே.கே.முருகன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் பி.வி. செந்தில், மாநில வன்னியர் சங்க செயலாளர் ஆர்.அரசாங்கம், மாவட்ட அமைப்பு செயலாளர் சா.மதியழகன், மாநில செயற்குழு உறுப்பினர் பா.மதியழகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி முருகேசன் வரவேற்று பேசினார். பா.ம.க. மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.வும், பா.ம.க. மாநில உழவர் பேரியக்க செயலாளருமான இல.வேலுசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்தும், கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு வழங்கினர். மேலும் மரக்கன்றுகளை வழங்கினர். பின்னர் கோவில் வளாகத்தில் அவர்கள் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர். விழாவில் ஒன்றிய தலைவர்கள் மாயக்கண்ணன், தணிகாசலம், ஒன்றியக்குழு உறுப்பினர் நாராயணன், ஒன்றிய செயலாளர்கள் பசுவராஜ், சேட்டு, ஒன்றிய துணை தலைவர் வெங்கடாசலம், கோவிந்தராஜ், நிர்வாகிகள் முனுசாமி, கிருஷ்ணமூர்த்தி, கே.கே.எம்.அரவிந்தன், கோதாலராமன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. முடிவில் கேகே.எம்.வன்னியரசு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்