சுதந்திர போராட்ட தியாகி முத்துசாமி பிறந்த நாள் விழா

கோவில்பட்டியில் சுதந்திர போராட்ட தியாகி முத்துசாமி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2023-10-14 19:00 GMT

கோவில்பட்டி (கிழக்கு):

கோவில்பட்டி விஸ்வகர்மா உயர்நிலைப்பள்ளி முன்பு சுதந்திர போராட்ட தியாகி கே.எஸ்.முத்துசாமி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதைமுன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு செண்பகவல்லி அம்மன் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் திருப்பதி ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி மாவட்ட ஐ.என்.டி.யு.சி. பொதுச் செயலாளர் ராஜசேகரன் இனிப்பு வழங்கினார்.

இதில் பாலா, விஸ்வகர்மா மகாஜன சங்க செயலாளர் முருகேசன், பள்ளி செயலாளர் பாலு, விஸ்வகர்மா தொழிலாளர் சங்க தலைவர் மாடசாமி, செயலாளர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில், காளிமுத்து நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்