பிபின் ராவத் பெயர் சூட்ட நடவடிக்கை

காட்டேரி பூங்காவுக்கு பிபின் ராவத் பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-07-22 15:09 GMT

குன்னூர், 

குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந் தேதி ஹெலிகாப்டர் பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் இந்தியாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் நினைவாக, குன்னூர் அருகே தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காட்டேரி பூங்காவுக்கு பிபின் ராவத் பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய முன்னாள் துணை தலைவர் வினோத்குமார் பிரதமருக்கு மனு அனுப்பி இருந்தார். அந்த மனு தற்போது பரிசீலனைக்காக தோட்டக்கலை துறைக்கு வந்து உள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, காட்டேரி பூங்காவுக்கு பிபின் ராவத் பூங்கா என பெயர் சூட்ட தமிழக அரசின் முடிவுக்கு கட்டுப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்