பாகம்பிரியாள் கோவிலில் ரூ.11.83 லட்சம் உண்டியல் காணிக்கை

பாகம்பிரியாள் கோவிலில் ரூ.11.83 லட்சம் உண்டியல் காணிக்கை இருந்தது.

Update: 2023-06-07 18:45 GMT

தொண்டி, 

திருவாடானை தாலுகா திருவெற்றியூர் பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் ஞானசேகரன் தலைமையில் நேற்று உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ.11 லட்சத்து 83 ஆயிரத்து 229 ரொக்கம், 52.5 கிராம் தங்கம், 360 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். தேவஸ்தான மேலாளர் இளங்கோ, சிரஸ்தார் சுப்பிரமணியன், அறநிலையத்துறை ஆய்வாளர் சண்முகசுந்தரம், சரக கண்காணிப்பாளர் செந்தில்குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்