முத்தாரம்மன் கோவிலில் உண்டியல் பணம் எண்ணிக்கை
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் உண்டியல் பணம் எண்ணப்பட்டது.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் 13 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. அதில் பக்தர்கள் செலுத்தியிருந்த காணிக்கையை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. தென்காசி உதவி ஆணையர் கோமதி தலைமையில் நடைபெற்ற இந்த பணியில் கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், சாத்தான்குளம் ஆய்வாளர் பகவதி, கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரி, தேரியூர் ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள், பிறை குடியிருப்பு சிவந்தி கல்வியியல் கல்லூரி மாணவிகள், ஊர் பொதுமக்கள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் ரூ.35 லட்சத்து 12 ஆயிரத்து 770 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். மேலும் 135 கிராம் தங்கம், 813 கிராம் வெள்ளியும் கிடைத்தது.