ரேஷனில் வாங்காத பொருட்களுக்கு பில் - விற்பனையாளர்களுக்கு கூட்டுறவு பதிவாளர் எச்சரிக்கை .!
ரேஷனில் வாங்காத பொருட்களுக்கு பில் போட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென விற்பனையாளர்களுக்கு கூட்டுறவு பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
மத்திய மாநில அரசுகள் வழங்கும் உணவு பொருட்கள் மானிய விலையில் இந்த ரேஷன் கடைகள் வாயிலான விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகிறார்கள். ஆனால் சில ரேஷன் கடைகளில் ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வாங்காமலேயே வாங்கியதாக குடும்ப அட்டைதாரர்களுக்கு குறுஞ்செய்தி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், பொதுமக்கள் வாங்காத பொருட்களை வாங்கியதாக பில் போடப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.