சொரக்குடி அய்யனார் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி

சொரக்குடி அய்யனார் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி;

Update: 2023-08-04 18:45 GMT

நன்னிலம் அருகே உள்ள சொரக்குடியில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இங்குள்ள உண்டியலில் பக்தர்கள் போடும் காணிக்கை 5 மாதங்களுக்கு ஒரு முறை எண்ணும் பணி நடைபெறும். அதன்படி நேற்று மதியம் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது. கோவில் செயல் அலுவலர் அசோக்குமார், தக்கார் தமிழ்மணி, கணக்கர் சிவபுண்ணியம் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் ரூ. 2 லட்சத்து 12 ஆயிரத்து 468-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்