நிலத்தகராறு காரணமாக இருதரப்பினர் மோதல்

நிலத்தகராறு காரணமாக இருதரப்பினர் மோதல்; 7 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-10-28 19:21 GMT

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஆலங்காயம் படகுப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் சங்கர் மற்றும் சண்முகம். இருவரும் உறவினர்கள். அதே பகுதியில் சங்கருக்கு ஒரு ஏக்கர் நிலமும், சண்முகத்திற்கு ஒரு ஏக்கர் நிலமும் உள்ளது. சங்கர், சண்முகம் இடையே கடந்த 20 ஆண்டுகளாக நிலத்துக்கு போகும் வழி பிரச்சினை இருந்து வருகிறது.

இதுகுறித்து சங்கர் இது வரை ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் 5 முறை புகார் அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சங்கர் நிலத்தில் நெல் அறுவடை முடித்து, சண்முகம் நிலத்தின் வழியாக எடுத்து சென்றதாக கூறி சண்முகம், சங்கரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவரின் ஆதரவாளர்களும் ஒருவருக்கு ஒருவர் கத்தி மற்றும் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர்.

இதில் சங்கர் தரப்பில் முருகேசன், அபிராமி, சிரஞ்சீவி, ஜெயந்தி ஆகிய 5 பேரும், சண்முகம் தரப்பில் சண்முகம் மற்றும் ஜெயமோகன் ஆகியோர் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் ஜெயந்தி மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்