இருதரப்பினர் மோதல்; 6 பேர் மீது வழக்கு

மூலைக்கரைப்பட்டி அருகே இருதரப்பினர் மோதல்; 6 பேர் மீது வழக்கு

Update: 2022-06-06 20:56 GMT

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டியை அடுத்த இந்திரா நகரை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 55). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் இசக்கி (39). சம்பவத்தன்று இசக்கி வளர்த்து வரும் மாடு சின்னத்துரையின் வைக்கோல் படப்பில் மேய்ந்து விட்டது. இதனால் ஆத்திரமடைந்த சின்னத்துரை மாட்டை அடித்ததாக கூறப்படுகிறது. மேலும் இசக்கி, சின்னத்துரையை கண்டித்ததாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இசக்கி, அவரது மனைவி செல்வி (35) ஆகியோருக்கும், சின்னத்துரை, அவரது மகன் மணிகண்டன் (29), மனைவிகள் தெய்வகனி (40), ஆறுமுககனி (45) ஆகியோருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வாா் விசாரணை நடத்தி 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்