இருதரப்பினர் மோதல்; 4 பேர் காயம்

சேலத்தில் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். இதில் 4 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-09-27 20:18 GMT

சூரமங்கலம்:-

சேலம் மாமாங்கம் பகுதியில் நேற்று இரவு திடீரென இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் கைகளால் தாக்கி கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் இருதரப்பை சேர்ந்தவர்களையும் போலீசார் அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.

இந்த மோதலில் காயமடைந்த 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த மோதல் எதற்காக ஏற்பட்டது? என்பது போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்