இருதரப்பினர் மோதல்; 4 பேர் கைது

இளையான்குடி அருகே இருதரப்பினர் இடையே நடந்த ேமாதலில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-21 18:04 GMT

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள சிறுபாலை கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் ஊர்வலம் நடந்தது.. ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இருதரப்பினரும் இளையான்குடி போலீசில் புகார் அளித்தனர். இதில் தொடர்புடைய 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சிறுபாலை கிராமத்தை சேர்ந்த பா.ஜனதா தெற்கு ஒன்றிய தலைவர் ராஜபிரதீப்(வயது 40), குமார்(40), கருணாகரன்(50), பாண்டி(48) ஆகியோர் கைது செய்யப்பட்டு மேலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்