பைக்கில் பட்டாசு வெடித்துக்கொண்டே வீலிங் செய்த இளைஞர் - அதிர்ச்சி வீடியோ

பைக்கின் முன்புறத்தில் பட்டாசுகள் வெடித்தவாறு அந்த இளைஞர் வீலிங் செய்துள்ளார்.

Update: 2023-11-13 08:04 GMT

சென்னை,

தீபாவளி பண்டிகையின்போது இளைஞர்கள் பைக்கில் ஆபத்தான முறையில் வீலிங் செய்தவாறு சாலையில் பயணம் செய்த நிகழ்வுகள் அரங்கேறின.

அந்த வகையில் பைக்கின் முன் பகுதியில் பட்டாசை வெடித்தப்படி சாலையில் இளைஞர் வீலிங் செய்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. மிகவும் ஆபத்தான முறையில் வீலிங் செய்த வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்