கள்ளிமந்தையம் அருகே 2 மொபட்டுகள் மோதல்; விவசாயி பலி

கள்ளிமந்தையம் அருகே 2 மொபட்டுகள் மோதிய விபத்தில் காயமடைந்த விவசாயி இறந்துபோனார்.;

Update:2023-06-03 02:30 IST

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள எல்லப்பாளையத்தை சேர்ந்தவர் கருப்புச்சாமி (வயது 70). விவசாயி. சம்பவத்தன்று இவர், திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் அருகே உள்ள கே.டி.பாளையத்தில் நடந்த கோவில் திருவிழாவுக்கு மொபட்டில் வந்தார். சாமி தரிசனம் செய்துவிட்டு, தனது ஊருக்கு மொபட்டில் புறப்பட்டார். அப்போது திருவிழா கூட்டத்தில், எதிரே செல்வி (52) என்பவர் ஒட்டி வந்த மற்றொரு மொபட்டும், கருப்புச்சாமியின் மொபட்டும் நேருக்குநேர் மோதியது.

இந்த விபத்தில் கருப்புச்சாமியும், செல்வியும் கீழே விழுந்து காயமடைந்தனர். இதையடுத்து அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து கருப்புச்சாமி மட்டும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கருப்புச்சாமி இறந்தார். இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்