கார் மோதி பீகார் வாலிபர் சாவு
கார் மோதி பீகார் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.;
சாத்தூர் அருகே உள்ள படந்தால் தென்றல் நகரை சேர்ந்தவர் அதுல்ஜெயின். இவருக்கு சொந்தமான நிறுவனம் ரெங்கப்பநாயக்கன் பட்டியில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரவிக்குமார் (வயது 27) என்பவர் கடந்த 3 மாதங்களாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று கோவில்பட்டி- விருதுநகர் 4 வழிச்சாலையில் சாலையை கடந்து சென்ற போது அந்த வழியாக வந்த கார் ரவிக்குமார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அதுல்ஜெயின் கொடுத்த புகரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்தது யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.