பெரிய ஏரியில் தீ விபத்து

தியாகதுருகம் அருகே பெரிய ஏரியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான மரங்கள் எரிந்து சேதமானது.

Update: 2022-07-07 17:23 GMT

கண்டாச்சிமங்கலம், 

தியாகதுருகம் அருகே நாகலூர் ஊராட்சியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் கருவேல மரங்கள் உள்ளிட்டவை உள்ளது.. மேலும் மயில், கொக்கு, நீர் பறவைகள் உள்ளிட்ட பறவைகளும் வசித்து வந்தன. இந்தநிலையில் நேற்று இரவு 7 மணியளவில் ஏரியில் உள்ள விழல்கள் தீப்பிடித்து எரிய தொடங்கின. அந்த தீ அங்கிருந்த கருவேல மரங்களுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. சுமார் 20 அடி உயரத்திற்கு தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதில் ஏராளமான மரங்கள் எாிந்து சேதமானது. மேலும் 100-க்கும் மேற்பட்ட பறவைகள் செத்து இருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்