பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா

பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

Update: 2023-06-05 18:28 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பில்லிமங்கலம் கிராமத்தில் பெரிய கண்மாயில் ஊத்தா குத்துதல் எனப்படும் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதையடுத்து இன்று நத்தம், பூலாம்குறிச்சி, பொன்னமராவதி, மணப்பாறை, திண்டுக்கல், திருமயம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்மாயில் திரண்டனர். தொடர்ந்து கண்மாய்க்குள் இறங்கி போட்டிப்போட்டு கொண்டு ஊத்தாவை வைத்து மீன் பிடித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான கட்லா, விரால், கெண்டை, கெளுத்தி, ஜிலேபி ஆகிய மீன்கள் கிடைத்தது. தங்களுக்கு கிடைத்த மீன்களை இளைஞர்கள் ஆர்வமுடன் வீட்டுக்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்