73 டாஸ்மாக் கடைகளுக்கு மதுக்கூடங்கள் அமைக்க நாளை இ-டெண்டர் மூலம் ஏலம்
73 டாஸ்மாக் கடைகளுக்கு மதுக்கூடங்கள் அமைக்க இ-டெண்டர் மூலம் ஏலம் நாளை (வெள்ளிக்கிழமை) விடப்படுகிறது.;
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் செயல்படும் 81 டாஸ்மாக் (மதுபானம்) கடைகளில், 8 கடைகள் மதுக்கூடங்களுடன் இயங்கி வருகிறது. இதில் மதுக்கூடம் இல்லாத 73 டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து மதுக்கூடங்களுக்கு இ-டெண்டர் மூலம் ஏலம் விடப்படுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணி வரை https://tntenders.gov.in.nicgep/app என்ற வலைத்தளத்தில் சென்று விண்ணப்பம் செய்யலாம். நாளை மாலை 4.30 மணியளவில் டெண்டர் திறக்கப்படும், என்று ஒருங்கிணைந்த பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.