ஐதராபாத் முதல் கன்னியாகுமரி வரைபட்டதாரி வாலிபர் சைக்கிள் பயணம்ஓசூரில், பொதுமக்கள் வரவேற்றனர்

Update: 2023-07-22 19:45 GMT

ஓசூர்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் தன்பஜன் வினோத் (வயது32). பட்டதாரியான இவர், உணவுப்பொருள் கொள்முதல் தரகர் வேலை செய்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி தெலுங்கானா மாநிலத்தில் உலக பூமி தினம் கொண்டாடியபோது பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிப்பொருட்களை பயன்படுத்தும் வாகனங்களை தவிர்த்து விட்டு பொதுமக்கள் சைக்கிள்களை பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும், தனிமனிதனின் ஆரோக்கியமும் மேம்படும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த பிரசாரத்தால் ஈர்க்கப்பட்ட தன்பஜன் வினோத், சைக்கிள் பயன்பாடு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த ஜூலை மாதம் 4-ந் தேதி ஐதராபாத் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 1,200 கி.மீ தூரம் சைக்கிள் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார். தெலுங்கானாவில் இருந்து சைக்கிளில் பெங்களூரு வந்த அவர் ஓசூருக்கு வந்தார். அவருக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் கூறுகையில், தற்போது, ஆடி மாதத்தில் அனைத்து பகுதிகளிலும் பலத்த காற்று வீசுவதால் தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிள் பயணத்தை மேற்கொள்வது மிகுந்த சவாலாகவும், கடும் சிரமமாகவும் உள்ளது என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்