விருதுநகர் ஆனைக்குழாய் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). இவர் வீட்டின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியூர் சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் மாயமாகிவிட்டது. இதுபற்றி அவர் கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.