ரூ.1¼ கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை

கொருக்கை அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1¼ கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜையை ஒ.ஜோதி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

Update: 2023-09-27 14:08 GMT

செய்யாறு

செய்யாறு தாலுகா கொருக்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1 கோடியே 27 லட்சம் மதிப்பில் நபார்டு திட்டத்தில் கூடுதலாக 6 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கட்டுமான பணிகளை மேற்கொள்ள பூமி பூஜை நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன் தலைமை தாங்கினார். பள்ளி துணை ஆய்வாளர் ஸ்ரீபதி, பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ, கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.

இதில் ஒப்பந்ததாரர் கதிரவன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்