ரூ.60 லட்சத்தில் திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை

கெலமங்கலம் ஒன்றியத்தில் ரூ.60 லட்சத்தில் திட்டப்பணிகளுக்கு செல்லக்குமார் எம்.பி. பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தார்.

Update: 2023-05-17 18:45 GMT

ராயக்கோட்டை

கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.9.90 லட்சம் மதிப்பில் புதிய நூலக கட்டிடம், தொட்ட திம்மனஅள்ளி ஊராட்சி நெல்லூர் கிராமத்தில் ரூ.9.60 லட்சத்தில் சமுதாய கூடம், திம்ஜேப்பள்ளி ஊராட்சி உள்ளுகுறுக்கை கிராமத்தில் ரூ.9.90 லட்சத்தில் பல்நோக்கு கட்டிடம், பிள்ளாரிஅக்ரகாரம் ஊராட்சி கோணேரிஅக்ரஹாரம் கிராமத்தில் ரூ.6.10 லட்சத்தில் பல்நோக்கு கட்டிடம் கட்டப்படுகிறது. மேலும் ஜெக்கேரி ஊராட்சி சின்னட்டி பாலமுருகன் கோவில் அருகே ரூ.9.90 லட்சத்தில் சமுதாயக்கூடம், நாகமங்கலம் ஊராட்சி பெரிய நாகதுணை கிராமத்தில் ரூ.6.10 லட்சத்தில் பல்நோக்கு கட்டிடம், கெலமங்கலம் தமிழ் தொடக்கப்பள்ளியில் ரூ. 8.40 லட்சத்தில் சமையல் கூடம் கட்டப்படுகிறது. கெலமங்கலம் ஒன்றியத்தில் மொத்தம் ரூ.59.90 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் செல்லக்குமார் எம்.பி. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பொறியாளர் தமிழ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சின்னராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர் அரியப்பன், காங்கிரஸ் மேற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் ஹரிஷ்பாபு, ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலைச்செல்வி ராஜேந்திரன், ஈஸ்வரிமுத்தன், கோவிந்தசாமி, கெலமங்கலம் வட்டார தலைவர் சுந்தர்ராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்