சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை

பாகலூர் அருகே ஜிமங்கலத்தில் சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது.

Update: 2023-02-26 18:45 GMT

ஓசூர்

ஓசூர் ஒன்றியம் பாகலூர் ஊராட்சிக்குட்பட்ட ஜிமங்கலம் கிராமத்தில், ஆதிதிராவிடர் தெருவில் 15-வது நிதி மானியத்தில் ரூ.3 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி, பாகலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர். இதில், ஒன்றிய கவுன்சிலர் முனிரத்தினா முனிராஜ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சீனிவாச ரெட்டி மற்றும் பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்