சத்துணவு கூடம் கட்ட பூமி பூஜை
பையர்நாயக்கன்பட்டி அரசு பள்ளியில் சத்துணவு கூடம் கட்ட பூமி பூஜை நடந்தது.
அரூர்:
அரூர் அருகே உள்ள பையர்நாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.5.65 லட்சம் மதிப்பில் சத்துணவு கூடம் கட்ட பூமி பூஜை நடந்தது. சம்பத்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதில் ஒன்றியக்குழு தலைவர் பொன்மலர், ஒன்றிய செயலாளர் பசுபதி, கூட்டுறவு சங்கத்தலைவர் சிவன், மற்றும் சாமிக்கண்ணு, வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.