தளி தொகுதியில்ரூ.2.40 கோடியில் தார்சாலை அமைக்க பூமிபூஜைராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பணியை தொடங்கி வைத்தார்

Update: 2023-07-26 19:45 GMT

ராயக்கோட்டை

தளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கெலமங்கலம் கூட்ரோடு முதல் வெங்கடாபுரம் வரை முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ.2 கோடியே 40 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடந்தது. ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சீனிவாஷ், ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா வெங்கட்ராமன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெயராமன், கவுன்சிலர்கள் ரமேஷ், சுரேந்திரன், பிரசாந்த் கவுடா, சின்ன வீரப்பா, சென்னீரப்பா, ஊராட்சி மன்ற தலைவர்கள் கிருஷ்ணப்பா, ஈஸ்வரி முத்தன், பிதிரெட்டி, பைரப்பா மற்றும் ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்