ஓசூர் சென்னத்தூர் பகுதியில்ரூ.1.33 கோடியில் தார்சாலை அமைக்க பூமி பூஜை

Update: 2023-07-25 19:45 GMT

ஓசூர்

ஓசூர் மாநகராட்சி 28-வது வார்டிற்குட்பட்ட சென்னத்தூர் பகுதியில், மாநகராட்சியின் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் மற்றும் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர். இதில், மாநகராட்சி கவுன்சிலர் புருஷோத்தம ரெட்டி, பகுதி செயலாளர் ராமு, மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர் இக்ரம் அகமது, சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்