கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை

பள்ளப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது.

Update: 2022-09-30 18:00 GMT

கொடைரோடு அருகேயுள்ள பள்ளபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11 லட்சம் செலவில் கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, கட்டிடப்பணியை தொடங்கி வைத்தார். நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் யாகப்பன், நிலக்கோட்டை அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் நாகேந்திரன், துணைத்தலைவர் சதீஸ்குமார் ஆகியோர் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.உதயகுமார், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர்கள் சங்கையா (பள்ளபட்டி), குணசேகரன் (குல்லலக்குண்டு), அ.தி.மு.க. நிர்வாகிகள் ராஜா என்ற வீரமணி, பாலகுரு, ஜெயராஜ், வக்கீல் ராஜா மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.




Tags:    

மேலும் செய்திகள்