ரூ.42½ லட்சத்தில் ஊராட்சி செயலக கட்டிடம் கட்ட பூமி பூஜை

குத்தாலம் அருகே கோமலில் ரூ.42½ லட்சத்தில் ஊராட்சி செயலக கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது

Update: 2023-04-24 18:45 GMT

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோமல் ஊராட்சி உள்ளது. இங்கு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம், தேசிய நிதிக்குழு நிதியிலிருந்து ரூ. 42.63 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலகம் கட்டிட பூமி பூஜை விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் எழிலரசி பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திரன், உமாசங்கர்,ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜெயசுதா ரமேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் கலந்து கொண்டு ஊராட்சி செயலக கட்டிட பூமி பூஜையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கட்டிட பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார். அப்போது குத்தாலம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் எழுமகளூர் ராஜா, ஒன்றிய குழு உறுப்பினர் திவ்யா சரண்ராஜ், பொறியாளர் கிருஷ்ணகுமார், பணி மேற்பார்வையாளர் சரவணன் உள்ளிட்ட ஊராட்சி நிர்வாகிகள் வார்டு உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்