ரூ.29 லட்சத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட பூமி பூஜை
கிருஷ்ணாவரம் கிராமத்தில் ரூ.29 லட்சத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே உள்ள கிருஷ்ணாவரம் கிராமத்தில் ரூ.29 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட பூமி பூஜை அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயசுதா, போளூர் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ராஜன், ஒன்றிய கவுன்சிலர் மாரியம்மாள் பரமாத்தை, முன்னாள் கவுன்சிலர் கண்ணபிரான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் கிருஷ்ணாவரம் கிராமத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் புதிய கொடிமரத்துக்கான பூஜையை அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.