ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டுவதற்கு பூமி பூஜை

கலசபாக்கம் அருகே ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது.

Update: 2023-06-30 16:54 GMT

கலசபாக்கம்

கலசபாக்கம் அடுத்த மேல்வில்வராயநல்லூர் பகுதியில் மிருகண்டா அணை தண்ணீர் செல்லும் வெருமுடி ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்ட பூமி பூஜை அண்ணாதுரை எம்.பி., சரவணன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் நடந்தது.

பின்னர் அண்ணாதுரை எம்.பி. கூறுகையில், மிருகண்டா அணையில் இருந்து 20-க்கும் மேற்பட்ட ஏரிகளின் வழியே தண்ணீர் வந்து கடைசியாக எலத்தூர் ஏரிக்கு சென்று செய்யாற்றில் கலக்கிறது

இதன் குறுக்கே மேல்வில்வராயநல்லூரில் இருந்து எர்ணாமங்கலம் கிராமத்திற்கு செல்ல சாலை வசதி மற்றும் மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து பி.எம்.ஜி.எஸ்.ஒய். திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட உள்ளது.

மேலும் மேல்வில்வராயநல்லூரில் இருந்து எர்ணாமங்கலம் வரை சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 6 சிறுபாலங்கள் கட்டப்பட்டு தார் சாலை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் அன்பரசிராஜசேகரன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவக்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்