வேப்பனப்பள்ளி
வேப்பனப்பள்ளி அருகே உள்ள ராமச்சந்திரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13.16 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை, ரூ.6.10 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நடந்தது. கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூஜை செய்து திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அசோக்குமார் எம்.எல்.ஏ., வேப்பனப்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் சைலேஷ் கிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.