சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை

சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை

Update: 2023-07-14 19:30 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோதவாடி ஊராட்சியில் 15-வது நிதி குழு மானியத்தில் இருந்து ரூ.3 லட்சத்து 54 ஆயிரம் செலவில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. பூமி பூஜைக்கு கோதவாடி ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.ரத்தினசாமி தலைமை தாங்கி பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இதில் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கிரி கதிர்வேல், ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவரும், சொக்கனூர் ஊராட்சி மன்ற தலைவருமான பிரபு என்ற திருநாவுக்கரசு, கோதவாடி ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் ராமசாமி கவுண்டர், கே.எம். மயில்சாமி பொன்னுச்சாமி கவுண்டர், எ.கனகராஜ், ஜெயக்குமார், வார்டு உறுப்பினர் சிவக்குமார், கோதவாடி பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்