ஆரணியில் சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை
ஆரணியில் சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் களத்துமேட்டு தெருவில் உள்ள பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று வருவதாகவும், எனவே, தங்கள் பகுதியிலேயே ரேஷன் பொருட்கள் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.
அதைத் தொடர்ந்து சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் ரேஷன் கடை அமைக்கவும், அதே பகுதியில் ரூ.4 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகளை பொதுப்பணித்துறை மூலமாக தேர்வு செய்த இடங்களில் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் சரவணன் சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க பூமி பூஜை நடத்தினார்.
நகரமன்ற உறுப்பினர் சாமுத்திரிகா சதீஷ் முன்னிலை வகித்தார். ஆவின் தலைவரும், நகரமன்ற துணைத்தலைவருமான பாரி பி.பாபு வரவேற்றார்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் அசோக்குமார், நகரமன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி.மோகன், தேவராஜ், சிவக்குமார், விநாயகம், ஆ.நடராஜன், ரம்யா குமரன், முன்னாள் அரசு வக்கீல் வி.வெங்கடேசன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், கட்சி பொறுப்பாளர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.