பூலோக வைகுண்ட பெருமாள் சாமி திருவீதி உலா

இரும்பேடு கிராமத்தில் பூலோக வைகுண்ட பெருமாள் சாமி திருவீதி உலா நடந்தது.

Update: 2022-10-10 10:05 GMT

வந்தவாசி

வந்தவாசி அருகே இரும்பேடு கிராமத்தில் பூலோக வைகுண்ட சாமி கோவில் உள்ளது.

புரட்டாசி மாதத்தையொட்டி இக்கோவிலில் உள்ள பூலோக வைகுண்ட பெருமாள் சாமிக்கு பால், தேன், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட விசேஷ திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

தொடர்ந்து பூலோக வைகுண்ட பெருமாள் சாமி மேளத்தாளங்களுடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்