ரூ.4 கோடியில் சமத்துவபுர வீடுகளை சீரமைக்க பூமி பூஜை
ரூ.4 கோடியில் சமத்துவபுர வீடுகளை சீரமைக்க பூமி பூஜை
நாகூர்:
நாகை மாவட்டம் நாகூர் அருகே மேலவாஞ்சூரை அடுத்த முட்டம் சமத்துவபுரத்தில் உள்ள 93 வீடுகளை ரூ.4 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்கான பூமி பூஜையை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், திருமருகல் ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன், பனங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா, தி.மு.க. இளைஞரணியை சேர்ந்த சந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.