ரூ.10 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை கட்டுமான பணிக்கு பூமிபூஜை
நாகை கலெக்டர் அலுவலகம் எதிரில் ரூ.10 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை கட்டுமான பணிக்கு பூமிபூஜை
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை கட்டுமான பணிக்கான பூமி பூஜையினை கலெக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், ஜெ.முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை கட்டுமான பணிக்கான பூமி பூஜையினை தொடர்ந்து, பயணிகள் நிழற்குடை கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு பயணிகளின் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டுவரப்படும் என்றனர். நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகர மன்ற துணைத்தலைவர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, நகராட்சி பொறியாளர் விஜய்கார்த்தி, 12-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பிரதீப் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.