ரூ.20 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு பூமி பூஜை

தலைவன்கோட்டை கிராமத்தில் ரூ.20 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜையை ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.;

Update: 2023-06-14 18:45 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் யூனியன் தலைவன்கோட்டை கிராமத்தில் ஒன்றிய நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் யூனியன் தலைவர் பொன்.முத்தையா பாண்டியன், புளியங்குடி நகர செயலாளரும், நகர்மன்ற துணைத் தலைவருமான அந்தோணிச்சாமி, தலைவன்கோட்டை பஞ்சாயத்து தலைவி சர்மிளா, துணைத் தலைவர் குபேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்