கோவில்பட்டியில் பூலித்தேவன் பிறந்த நாள் விழா

கோவில்பட்டியில் பூலித்தேவன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-09-02 15:18 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் மாமன்னர் பூலித்தேவன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவனர் செல்லத்துரை என்ற செல்வம் தலைமை தாங்கினார். அலங்கரிக்கப்பட்ட பூலித்தேவன் படத்துக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ, திருவள்ளுவர் மன்றத் தலைவர் கருத்தப்பாண்டி, பகத்சிங் ரத்ததானக் கழகம் காளிதாஸ் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

விழாவில் தொழிலதிபர் அங்கமுத்து, இந்திய கலாச்சார நட்புறவுக் கழக மாநிலச் செயலர் தமிழரசன், நகர்மன்ற உறுப்பினர் கவியரசன், பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, வக்கீல் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலர் ராஜசேகர், தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மேரிசீலா, உலக திருக்குறள் கூட்டமைப்பு மாவட்ட துணைச் செயலர் முத்துச்செல்வம், புரட்சி பாரதம் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலர் தாவீதுராஜா, அ.தி.மு.க. ஒன்றியச் செயலர் அன்புராஜ், பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்