பவானி பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாகிடாய் வெட்டி ரத்தம் குடிக்கும் நிகழ்ச்சி நடந்தது

பவானி பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் நடந்த ஆடிக்கிருத்திகை விழாவில் கிடாய் வெட்டி ரத்தம் குடிக்கும் நிகழ்ச்சி நடந்தது

Update: 2023-08-09 21:03 GMT

பவானி சீதபாளையத்தில் பழமையான ஆலமரத்து பெரியாண்டவர், பெரியாண்டிச்சி கோவில் உள்ளது.

இந்த கோவிலில் பெரியாண்டிச்சி, பேச்சியம்மன், சடைச்சியம்மன், சீரங்காயம்மாள், பெருமாள், கன்னிமார் சாமிகளுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.

ஆண்டுதோறும் ஆடிமாதம் கிருத்திகையன்று இங்கு விழா நடைபெறும். இந்த ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை பக்தர்கள் சின்னமோள பாளையம் பவானி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் கொண்டுவந்தனர். பின்னர் பெரியாண்டிச்சி, பேச்சியம்மன், சடைச்சியம்மன், சீரங்காயம்மாள், பெருமாள் உள்பட அனைத்து சாமிகளுக்கு அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின்னர் மதியம் 12 மணி அளவில் பெரும்பூஜை நடந்தது. அப்போது கோவில் பூசாரி ஆட்டை வெட்டி ரத்தம் குடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பூசாரி அருள் வந்து பலிகொடுக்கப்பட்ட ஆட்டின் ரத்தத்தை குடித்தார்.

ஜம்பை, தளவாய்ப்பேட்டை, சின்னமோளபாளையம், பெரிய மோளபாளையம் உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். அனைவருக்கும் அன்னதானமும் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்