பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நெல்லை சந்திப்பில் பாரதியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Update: 2022-09-11 20:00 GMT

நெல்லை சந்திப்பில் பாரதியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பாரதியார் நினைவு தினம்

மகாகவி பாரதியாரின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை சந்திப்பில் அவர் படித்த ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளி நுழைவு வாசல் அருகில் உள்ள பாரதியார் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். இதில் பொதுச் செயலாளர் சொக்கலிங்ககுமார், மாவட்ட துணை தலைவர் வண்ணை சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜனதா

பா.ஜனதா கட்சி சார்பில் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பொதுச் செயலாளர்கள் வேல் ஆறுமுகம், சுரேஷ், மண்டல தலைவர் மேகநாதன், மாவட்ட செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நாம் தமிழர் கட்சி சார்பில் மகளிர் பாசறை நிர்வாகி சத்யா தலைமையில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாரதியார் உலக பொது சேவை நிதியத்தின் சார்பில் பாரதியார் சிலைக்கு நிதிய தலைவர் மரிய சூசை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுச் செயலாளர் கணபதி சுப்பிரமணியன், பொது நிதியாளர் பாப்பாக்குடி செல்வமணி, துணை செயலாளர் முத்துசாமி, முன்னாள் உதவி கலெக்டர் தியாகராஜன் உள்ளிட்டவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்