பாரதியார் பாலிடெக்னிக் கல்லூரியில்2-ம் ஆண்டு நேரடி மாணவிகள் சேர்க்கை தொடக்கம்

எட்டயபுரம் பாரதியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு நேரடி மாணவிகள் சேர்க்கை மே. 19-ந் தேதி முதல் தொடங்குகிறது.

Update: 2023-05-11 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் க.பேபிலதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான நேரடி 2-ம் ஆண்டு மாணவர் நேரடி சேர்க்கை (பிளஸ்-2 அல்லது ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றவர்கள்) விண்ணப்பித்தை www.tnpoly.in என்ற இணையதள முகவரியில் மே.8 முதல் 26-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். கல்லூரி குறியீட்டு எண்- 178. விண்ணப்ப பதிவு கட்டணம் எஸ்.சி., எஸ்.டி மாணவிகளுக்கு இலவசம். மற்ற வகுப்பினருக்கு பதிவு கட்டணம் ரூ.150-ஐ டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இணையதள வங்கி சேவை மூலம் செலுத்தலாம். இக்கல்லூரியில் MECH, EEE, ECE, ICE, CE, G.TECH ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. மேலும், இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவிகள் நேரடியாக கல்லூரிக்கு வந்து விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தகவல்கள் பெற 94861 95488, 04632-271238 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். முதலாம் ஆண்டு மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு இணையதளம் வாயிலாக மே. 19-ந் தேதி முதல் தொடங்கும், என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்