பைரவாஷ்டமி வழிபாடு

பைரவாஷ்டமி வழிபாடு நடந்தது.

Update: 2023-01-14 19:37 GMT

தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவாஷ்டமி வழிபாடு நடைபெற்றது. இதில் விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், வடுக பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் சுவாமி, அம்பாள், பைரவருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் பைரவருக்கு ஷோடச உபசாரங்கள், மங்கள ஆரத்தி நடைபெற்றது. பைரவருக்கு சிவபுராணம் பைரவாஷ்டோத்திரம் உள்ளிட்ட பல்வேறு பதிகங்களை பாடி பக்தர்கள் வழிபாடு செய்தனர். பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பைரவர் வழிபாட்டு குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்