நங்கவள்ளியில் கேபிள் பதிக்க மண் தோண்டிய போது பத்ரகாளியம்மன் சிலை கண்டெடுப்பு

நங்கவள்ளியில் கேபிள் பதிக்க மண் தோண்டிய போது பத்ரகாளியம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

Update: 2023-08-29 20:57 GMT

மேட்டூர்:

கேபிள் பதிக்க...

மேட்டூர் தாலுகா நங்கவள்ளி கிராமத்தில் அம்பேத்கர் தெரு செல்லும் சாலையில் பி.எஸ்.என்.எல். கேபிள் பதிப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை தோண்டும் பணி நடைபெற்று வந்தது. நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அந்த பகுதியில் மண் தோண்டிய போது திடீரென பாறை உடைபடுவது போன்ற சத்தம் கேட்டது.

உடனே பொக்லைன் ஆபரேட்டர் கீழே இறங்கி அந்த இடத்தில் பார்த்தபோது 2 அடி உயரம் உள்ள பத்ரகாளியம்மன் சிலை மண்ணுக்குள் இருந்தது ெதரியவந்தது.

கற்சிலை மீட்பு

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வருவாய்த்துறையினர் விரைந்து வந்து 2 அடி உயரத்தில் 10 கைகள் கொண்ட பத்ரகாளியம்மன் கற்சிலையை மீட்டு நங்கவள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்து சாமி சிலைக்கு புடவை மற்றும் மாலை அணிவித்து வழிபட்டு சென்றனர். சாமி சிலை குறித்து வருவாய்த்துறையினர் கூறும்போது, 'சேலம் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் இந்த சாமி சிலை ஒப்படைக்கப்படும்' என தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்