திருச்சி-ஆறுமுகநேரி இடையேபுறா பந்தயம்

திருச்சி-ஆறுமுகநேரி இடையே புறா பந்தயம் நடைபெற்றது.;

Update: 2023-01-09 18:45 GMT

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி ரேசிங் பீஜியன் கிளப் சார்பில் திருச்சியில் இருந்து ஆறுமுகநேரி வரையிலான புறா பந்தயம் நடைபெற்றது.

308 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட இப் போட்டியில் ஆறுமுகநேரி, காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்தவர்களின் 175 புறாக்கள் பங்கேற்றன.

இதில் ஆறுமுகநேரி லட்சுமி மாநகரம் ஜோஸ் வினிஸ்டன் புறா 3.மணி 42 நிமிடம் 58 வினாடியில் கடந்து வந்து முதல் இடத்தை பெற்றது. புறா உரிமையாளருக்கு கிளப் சார்பில் பரிசு வழங்கப்பட்டது. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை போட்டி குழு தலைவர் நாராயணன், செயலாளர் ராஜ் பொருளாளர் பட்டு ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்