தூத்துக்குடி-பாளையங்கோட்டை இடையேசாலை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
தூத்துக்குடி-பாளையங்கோட்டை இடையே சாலை பணிகளை விரைந்து முடிக்க மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு சாலை பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி தூத்துக்குடி கோர்ட்டு முன்பு இருந்து மில்லர்புரம் வரையிலான தார்சாலை அமைப்பதற்காக தோண்டப்பட்டு உள்ளது. நீண்ட நாட்கள் ஆகியும் இந்த சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்த சாலை வழியாக அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. தூத்துக்குடி -நெல்லை மெயின் ரோடு என்பதால் பஸ்கள் அதிகமாக செல்கின்றன. அப்போது, சாலையில் இருந்து புழுதி கிளம்பி இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்படும் நிலையும் உள்ளது. ஆகையால் தோண்டப்பட்ட பகுதிகளில் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.