கூடலூர்-சுருளியாறு மின்நிலையம் இடையேஅரசு டவுன் பஸ் மீண்டும் இயக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கூடலூர்-சுருளியாறு மின்நிலையம் இடையே அரசு டவுன் பஸ் மீண்டும் இயக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிா்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2023-03-24 18:45 GMT

கூடலூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் சுருளியாறு மின்நிலையம் அமைந்துள்ளது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கம்பம் நகரில் இருந்து கூடலூர், கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி வழியாக காலை, மாலை நேரங்களில் சுருளியாறு மின் நிலையம் வரை அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதேபோல் கம்பம் நகரில் இருந்து சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி வழியாக கூடலூர் வரை டவுன் பஸ் இயக்கப்பட்டது.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், கேரள மாநில ஏலக்காய் தோட்டங்களுக்கு கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இந்த பகுதி வழியாக இயக்கப்பட்டு வந்த அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

மேலும் தினசரி ஏலக்காய் தோட்டங்களுக்கு கூலி வேலைக்கு சென்று திரும்பும் தொழிலாளர்கள் குமுளியில் இருந்து கம்பம், சென்று பின் அங்கிருந்து கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டிக்கு வர வேண்டிய அவலநிலை ஏற்பட்டு உள்ளது. எனவே மீண்டும் கம்பம் நகரில் இருந்து கூடலூர் வழியாக சுருளியாறுமின் நிலையத்திற்கும், கம்பம் நகரில் இருந்து சுருளிப்பட்டி வழியாக கூடலூர் வரையும் அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்