வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி

வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

Update: 2022-11-03 18:30 GMT

கரூர் மாவட்டம் நடையனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, நத்தமேடு, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர், பாலத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வெற்றிலை பயிர் செய்துள்ளனர். பின்னர் வெற்றிலைகளை பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் 104 கவுளி கொண்ட இளங்கால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ.6,500-க்கும், 104 கவுளி கொண்ட இளங்கால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.3,800-க்கும் விற்பனையானது. 104 கவுளி கொண்ட முதிகால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ.4,000க்கும், முதிகால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.1200-க்கும் விற்பனையானது. வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்