முதியோர் உதவித்தொகை கேட்டு கலெக்டரை முற்றுகை

கே.வி.குப்பத்தில் ஆய்வுக்கு சென்ற கலெக்டரை, முதியோர் உதவித்தொகை கேட்டு பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-09-06 18:33 GMT

கே.வி.குப்பத்தில் ஆய்வுக்கு சென்ற கலெக்டரை, முதியோர் உதவித்தொகை கேட்டு பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

முதியோர் உதவித்தொகை

கே.வி.குப்பம் தாலுகா கீழ்விலாச்சூர் துணை சுகாதார நிலைய வளாகத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி மக்களிடம் குறைகள் ஏதாவது இருந்தால் தெரிவிக்கும்படி கலெக்டரே ஒரு சிலரை அழைத்து கேட்டார். கீழ் விலாச்சூர் ஜம்பு ஏரியின் மதகு வழியாக வரும் நீர் பாசன கால்வாய் ஆக்ரமிப்பில் உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அந்த ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து அகற்றி உடனடி நடவடிக்கை எடுக்கும்படி வருவாய்த்துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அப்போது ஆண்கள், பெண்கள் என சுமார் 20-க்கும் மேற்பட்ட முதியோர்கள்,தங்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கேட்டு கலெக்டரை சூழ்ந்து முற்றுகையிட்டனர். கலெக்டர் உடனடியாக அதிகாரிகளை அழைத்து அவர்களுக்கு உதவித் தொகை கிடைக்க ஆவன செய்யுமாறு உத்தரவிட்டார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

பின்னர் வடுகந்தாங்கல் ெரயில்வே கேட் மீது மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் பழைய வழியில் செல்ல பாதை அமைப்பது குறித்தும் கலெக்டர் பார்வையிட்டார். வடுகந்தாங்கல் மேல்நிலைப்பள்ளி, லத்தேரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வடுகந்தாங்கல் ஊராட்சி மன்ற வளாகம் ஆகிய பகுதிகளில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

மேலும் வடுகந்தாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். நிகழ்ச்சியின் போது திட்ட இயக்குனர் ஆர்த்தி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன், சப்-கலெக்டர் வெங்கட்ராமன், தாசில்தார் கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபி, கல்பனா, ஒன்றியக்குழு தலைவர் ரவிச்சந்திரன், கவுன்சிலர்கள் மாலாமார்க்கபந்து, ஜெயாமுருகேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மோகன், ஜெயந்தி, ஊராட்சி செயலாளர்கள் விஸ்வநாதன், பழனி உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்