பெங்களூருவை சேர்ந்த சமையல் தொழிலாளி மர்மச்சாவு
கலசபாக்கம் அருகே பெங்களூருவை சேர்ந்த சமையல் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலசபாக்கம்
கலசபாக்கம் அருகே பெங்களூருவை சேர்ந்த சமையல் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிளாஸ்டிக் கவர்
போளூர் அருகே 99 புதுப்பாளையம் கிராமத்தின் சாலை ஓரம் உள்ள மறைவான இடத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் முகத்தில் பிளாஸ்டிக் கவர் கட்டியபடி இறந்து கிடந்தார்.
இதைத்பார்த்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று இறந்து கிடந்த நபரின் கழுத்தில் கட்டி இருந்த பிளாஸ்டிக் கவரை எடுத்து பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
மேலும் அவர் இறந்து கிடந்த இடத்தில் திருப்பதி லட்டு மற்றும் துணி பை இருந்தது.
மர்மச்சாவு
உடலில் எந்த காயமும் இன்றி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இறந்தவர் பெங்களூருவை சேர்ந்தபாபு (வயது 50), என்பதும், பெங்களூருவில் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.
மேலும் இவருக்கு திருமணமாகி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். சமீபத்தில் தான் அவரது மகைள மும்பையில் உள்ள ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
மகள் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை முயற்சி செய்து தற்போது கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் மனம் உடைந்த பாபு போளூர் அருகே உள்ள காங்கயனூர் கிராமத்தில் உள்ள தனது குலதெய்வமான அம்மன் கோவிலுக்குச் சென்று வருவதாக கூறிவிட்டு பெங்களூருவில் இருந்து 2 நாட்கள் முன்பு வந்துள்ளார்.
பெங்களூருவில் இருந்து பாபு திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
பின்னர் போளூர் அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வரும் வழியில் 99 புதுப்பாளையம் கிராமத்தின் அருகே சாலை ஓரம் முகத்தில் பிளாஸ்டிக் கவர் கட்டியவாறு மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.