மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர ஸ்கூட்டர் வழங்க பயனாளிகள் தேர்வு முகாம்
மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர ஸ்கூட்டர் வழங்க பயனாளிகள் தேர்வு முகாம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது.
மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர ஸ்கூட்டர் வழங்க பயனாளிகள் தேர்வு முகாம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது.
பயனாளிகள் தேர்வு முகாம்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முதுகுதண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர ஸ்கூட்டர் மற்றும் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி ஆகியவை வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். இதில் எலும்பு முறிவு சிறப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் ரவீந்திரன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விஸ்வநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் ஆகியோர் கலெக்டர் முன்னிலையில் பயனாளிகளை தேர்வு செய்தனர்.
224 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு
முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் சான்றுகளை பெற்று கலெக்டர் ஆய்வு செய்ததோடு நேரில் பார்வையிட்டு நேர்காணல் நடத்தினர். இதில் மாவட்டம் முழுவதில் இருந்து 224 முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.முகாமில் 3 சக்கர ஸ்கூட்டர் மற்றும் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி ஆகியவை பெற தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
3 சக்கர ஸ்கூட்டர் வழங்கப்படும்
மேலும் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் அனைவருக்கும் தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 3 சக்கர ஸ்கூட்டர் மற்றும் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.