சோழவந்தானில் கராத்தே மாணவர்களுக்கு பெல்ட் வழங்கும் விழா

சோழவந்தானில் கராத்தே மாணவர்களுக்கு பெல்ட் வழங்கும் விழா நடைபெற்றது

Update: 2023-01-08 21:28 GMT

சோழவந்தான்

சோழவந்தானில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தினசரி கராத்தே பயிற்சி பெற்று வருகின்றனர். மாணவர்களுடைய கராத்தே பயிற்சிதிறமை மற்றும் பயிற்சிதகுதி அடிப்படையில் ஒவ்வொரு கலர் பெல்ட் வழங்கப்பட்டது. இதற்கான விழாவிற்கு வர்த்தக சங்க முன்னாள் செயலாளர் ஆதிபெருமாள் தலைமை தாங்கினார். வார்டு கவுன்சிலர்கள் கணேசன், ரேகா ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாஸ்டர் சசிகுமார் வரவேற்றார். பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், தி.மு.க. நகர செயலாளர் கவுன்சிலர் வக்கீல் சத்தியபிரகாஷ் ஆகியோர் கராத்தே பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அடிப்படையில் கலர் பெல்ட் வழங்கி வாழ்த்தினர். தொடர்ந்து மாஸ்டர்கள் செல்லதுரை, சுதா, நாகேஸ்வரி சிவபாலன், ஜீவானந்தம் ஆகியோர் மாணவர்களின் கராத்தே பயிற்சி குறித்து பேசினார்கள். முடிவில் கராத்தே தலைமை மாணவர் அர்ஜுன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்